தர்மபுரியில் உளுந்து அறுவடை பணிகள் தீவிரம்

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டத்தில் உளுந்து அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 1100 ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் மழை பெய்யாததால், 3மாத பயிரான உளுந்து விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. உளுந்துக்கு சந்தையில் நல்ல விலை உள்ளது. ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால் மழையில்லாததால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். சாகுபடி செய்யப்பட்ட உளுந்தை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: