திமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டத்தில் திமுக உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தர்மபுரி ஒன்றியத்திற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல்லா, மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். தர்மபுரி திமுக ஒன்றிய செயலாளர் கேஎஸ்ஆர் சேட்டு மற்றும் தர்மபுரி ஒன்றியத்தை சேர்ந்தவர்களுக்கு, திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Related Stories: