பருவநிலை மாற்றத்தால் முசிறி, தொட்டியம் பகுதியில் பரவும் கண் நோயால் மக்கள் அவதி மருத்துவரை அணுக ஆலோசனை

தா.பேட்டை, டிச.6:  முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் சிலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பருவநிலை மாற்றமே காரணம் என கண் மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளார். முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளில் பொதுமக்கள் சிலர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் சிவந்தும், கண் எரிச்சலும், அரிப்பும், கண்ணைசுற்றி வீக்கம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கண் மருத்துவர் முருகேசன் கூறும்போது, தற்போது பரவலாக பொதுமக்களுக்கு ஏற்பட்டிருப்பது ஒரு விதமான கண் நோயாகும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படுவது ஆகும். கண்ணில் எரிச்சலும், அரிப்பும் ஏற்பட்டு சிவந்து போனால் கண்ணை மேலும், மேலும் தேய்க்காமல் சுத்தமான துணியால் துடைப்பதும், தூய்மையான தண்ணீரினால் சுத்தப்படுத்துவதும் நல்லது.

உடனடியாக கண் மருத்துவரிடம் கண்ணை பரிசோதிப்பது அவசியமாகும். கை வைத்தியம் அல்லது மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கண் பார்வை கடுமையாக ெபாதிக்கப்படும். எனவே கண் மருத்துவரிடம் சென்று காண்பிக்க வேண்டும். கண் நோய் ஏற்பட்டவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் தொலைக்காட்சி, கணினி, மொபைல்போன், உற்றுப்படித்தல், மிகுந்த வெளிச்சத்தில் பயணித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். குறிப்பாக மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொண்டு ஓய்வாக இருக்கும் பட்சத்தில் கண் நோய் விரைவில் குணமாகும் என்று கூறினார்.

Related Stories: