கையில் தட்டு ஏந்தி பார்வையற்றோர் நூதன போராட்ட முயற்சி திருச்சியில் பரபரப்பு

திருச்சி, டிச.6:  திருச்சியில் எம்ஜிஆர் சிலை முன்ற பார்வையற்றவர்கள் தட்டேந்தி போராட்டம் நடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலையில் உள்ள பார்வையற்றோர் நலமையத்தில் 25க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் உள்ளனர். நேற்று காலை மையத்தின் தலைவர் தாமஸ் தலைமையில் 25க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் ஒன்று திரண்டு கையில் தட்டு ஏந்தி எம்ஜிஆர் சிலை நோக்கி வந்தனர். ஒத்தக்கடை அருகே அவர்களை பொன்மலை உதவி கமிஷனர் சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பார்வையற்றோர் கூறுகையில், முதியோர் இல்லம் கட்டித்தரவேண்டும். ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி  யாரும் எங்கள் நலமையத்திற்கு வரவில்லை. யாரும் எங்களை கண்டு கொள்ளவில்ைல. எனவே  எம்ஜிஆர் சிலை அருகே தட்டு ஏந்தி போராட்டம் நடத்த செல்கிறோம் என்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கிருந்து திரும்பி சென்றனர். எம்ஜிஆர் சிலை முன் பார்வையற்றவர்கள் போராட்டம் நடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: