சாலையில் தேங்கி நிற்கும் நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச 6: திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் பின்புறம் கழுவமுள்ளித்தெரு உள்ளது. இந்த பகுதியில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சரியான மழைநீர் வடிகால் இல்லாததால் மழைவிட்டும் பல நாட்களாகியும் மழைநீர் வடியாது. இந்நிலையில் நகராட்சி அருகிலேயே நந்தவனகுளம் உள்ளது. இந்த குளத்தில் மழைநீர் வடிவதற்கு இடம் இல்லாததால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.  இந்த வழியாகதான் பொதுமக்கள் சென்று வருகின்றனர். பல்வேறு தொற்றுநோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நந்தவனகுளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றிட நடவடிக்கை எடுப்பதுடன் சாலையிலும் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: