கஜா புயலால் சேதமடைந்த தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்க பரிந்துரை மத்தியக்குழுவினர் பேட்டி

முத்துப்பேட்டை, டிச.6: முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை, பேட்டை, தில்லைவிளாகம், இடும்பாவனம், கற்பநாதர்குளம், எடையூர், பாண்டி உட்பட கடலோர கிராமங்களில் பயனிலிருந்த தென்னை மரங்கள் லட்சக்கணக்கில் புயலில் முறிந்து விழுந்து விட்டன. சுமார் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிரும் புயல் காற்றில் நிலைகுலைந்து சேதமடைந்துள்ளது.தற்போது 2வது முறையாக தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் வேளாண்மைதுறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மத்திய தொழில்நுட்ப பிரிவு இணை செயலர் தினேஷ்குமார் தலைமையில் வந்த வேளாண்மைதுறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பைய்யன், வேளாண் ஆணையர் மூர்த்தி, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குனர்(பொ)பாலசவுந்தரி ஆகியோர்  நேற்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட முத்துப்பேட்டை வந்தனர்.

முன்னதாக விருந்தினர் மாளிகையில் விவசாய சங்க பிரதிநிதி காவிரி ரங்கநாதன் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் முத்துப்பேட்டை அருகே தில்லைவிளாகம் பகுயில் உள்ள தென்னை விவசாயி ரங்கசாமி தென்னந்தோப்பிற்கு சென்று தென்னை பாதிப்புகளை அவர்கள் கேட்டறிந்தனர்.. இதையடுத்து ககன்தீப் பேடி மற்றும்  தினேஷ்குமார் ஆகியோர் நிருபர்களிடம் கூறியது, எங்களது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பித்து விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம் கிடைத்திட ஏற்பாடு செய்வோம். தென்னை இழப்பிற்கு தொழில்நுட்ப ரீதியாக என்ன உதவிட முடியுமோ அதையும் அரசுக்கு பரிந்து ரைப்போம் என்றனர்.

Related Stories: