திருவிசநல்லூர் பிரத்தியங்கிராதேவி கோயிலில் நிகும்பலா சிறப்பு மகா யாகம் இன்று நடக்கிறது

திருவிடைமருதூர், டிச. 6: திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூரில் சிதம்பரேஷ்வரர் கோயில் உள்ளது. சுயம்பாக எழுந்தருளியுள்ள இந்த சிவன் கோயிலில் தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லாதவாறு பிரமாண்டமான 9 அடி உயர பஞ்சமுக மகாமங்கள பிரத்தியங்கிராதேவி தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

அமாவாசை தினத்தன்று நடைபெறும் நிகும்பலா யாகத்தில் பங்கேற்று சங்கல்பம் செய்து வழிபட்டால் சத்ரு தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள், கிரஹ தோஷங்கள் விலகும்.  வியாபார, உத்யோக அபிவிருத்தி ஏற்படும். அதேபோல் ஓமல், போட்டி பொறாமை, தீய சக்திகளில் இருந்து விடுபடலாம்.

இந்நிலையில் இன்று அமாவாசையையொட்டி கோயிலில் நிகும்பலா மஹா யாகம் நடக்கிறது. இதைதொடர்ந்து சுவாமிக்கு பூர்ணாஸ்ஹூதி, மகா தீபாராதனை நடைபெறும். பின்னர் கடம் புறப்பாடு நடந்து பிரத்தியங்கராதேவிககு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. பின்னர் சிறப்பு மலர் அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

Related Stories: