பேராவூரணி நரிக்குறவர் காலனியில் அதிகாரி ஆய்வு

பேராவூரணி, டிச. 6: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பேராவூரணி ஒன்றிய பகுதிகளில் தேசிய பிற்பட்டோர் நலவாரிய துணை ஆணையர் முருகன் ஆய்வு செய்தார்.பேராவூரணி ஒன்றியம் செருவாவிடுதி வடக்கு ஆதிதிராவிடர் குடியிருப்பு, நாட்டாணிக்கோட்டை அம்பேத்கர் காலனி, நரிக்குறவர் காலனி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் நிவாரணம் முழுமையாக வந்தடைந்துள்ளதா என்று கேட்டறிந்தார். அதற்கு மண்ணெண்ணெய் வழங்கவில்லை, முறையாக சேதம் கணக்கெடுக்கவில்லையென பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அதிகாரிகளை அழைத்து நிவாரண பணிகளில் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த வேண்டும். இன்று மாலைக்குள் மண்ணெண்ணெய் வழங்க வேண்டுமென  அறிவுரை வழங்கினார். மேலும் நரிக்குறவர்களுக்கு தலா 2 சென்ட் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பாஜ மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், தஞ்சை மாவட்ட தலைவர் பன்னவயல் இளங்கோ, ஒன்றிய தலைவர் வீரா உடனிருந்தனர்.

Related Stories: