விவசாயத்திற்கு தேவையான அரிவாள், களைகொத்தி உற்பத்தியில் வடமாநில தொழிலாளர்கள் மும்முரம்

புதுக்கோட்டை, டிச. 6: புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் மத்தியபிரதேசம் மாநிலம் போப்பால் மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் அரிவாள், களைகொத்தி, கத்தி உள்ளிட்ட பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். புயல் பாதிப்பால் விற்பனை குறைந்து காணப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மத்தியபிரதேசம் மாநிலம் போபால் மாவட்டத்தில் இருந்து 4 குடும்பத்தை சேர்ந்த 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்துள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரிவாள், கத்தி, களைகொத்தி உள்ளிட்ட பொருட்களை செய்து விற்பனை செய்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நகர் புறங்களில் இந்த தொழில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் லாரியின் டயர் அருகே உள்ள இரும்பு பட்டையை கொண்டு மரக்கரியினை பற்ற வைத்து இரும்பை நல்ல முறையில் சூடு ஏற்றி சம்பட்டி கொண்டு அரிவாள், கத்தி, களைகொத்தி உள்ளிட்ட விவசாயிகளுக்கு தேவையான ஆயுதங்களை தயார் செய்து வருகின்றனர்.  இந்த தொழிலில் பெண்கள், ஆண்கள் என குடும்பம் குடும்பமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை மக்கள் விலைகொடுத்து வாங்கி செல்கின்றனர்.

Related Stories: