அரியலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

அரியலூர்,டிச,6: அரியலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பாகவும், விபத்துகளை நடைபெறாமல் தடுப்பது தொடர்பாகவும், விபத்துகளை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு முகாம் நடந்தது. காவல் கண்காணிப்பாளர்   தலைமையில், காவல் துணை காண்காணிப்பாளர் அரியலூர், வட்டாரபோக்கு வரத்து அலுவலர்கள், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை, மாநிலநெடுஞ்சாலை, மாவட்டநெடுஞ்சாலை மற்றும் கிராம புறசாலைகள் தொடர்பான மேல் அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் நிறுவன அதிகாரிகளும் பங்கு கொண்டனர். அதன் தொடர்ச்சியாக   விபத்துதடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை சாலையில் கண்கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகவிளக்கில் கருப்புவில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்திமுன் மாதிரியாக   காவல் கண்காணிப்பாளர்   ஸ்ரீனிவாசன்   கூறினார்.

Related Stories: