சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும்

கடலூர், டிச. 6: கடலூரில் மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தற்காலிக காவலர் பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 250 இரண்டாம் நிலை  காவலர்களுக்கான பயிற்சி துவங்கியுள்ளது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்  பயிற்சியை  துவக்கி வைத்து உரையாற்றும் போது, இரண்டாம் நிலை காவலர்களாக பயிற்சி பெறும் காவலர்கள் சமுதாய பணி மேற்கொள்வதற்கு தேவையான அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இப்பயிற்சியில் ஒழுக்கம் முக்கியமாக கடை பிடிக்க வேண்டும். பயிற்சி காவலர்கள் அனைவருக்கும் வங்கி மூலம் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு சம்பளம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சம்பளத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், துணை முதல்வர்  பழனி, சட்ட போதகர்  தேவி, கவாத்து போதகர் விஜயகுமார், உதவி சட்ட போதகர்கள்,உதவி கவாத்து போதகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: