நெல் வயலை சேதப்படுத்தும் எலியை பிடிக்கும் பணி தீவிரம்

ஸ்ரீமுஷ்ணம், டிச. 6: ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வயலை சேதப்படுத்தும் எலியை பிடிக்கும் பணி நடந்து வருகிறது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சம்பா நெல் பயிர்கள் நடவு செய்துள்ளனர். நடவு செய்யப்பட்ட பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் மூலம் பூச்சிகளை நீக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வயல்களில் உள்ள வரப்புகளில் எலிகள் வளைகள் அமைத்து நெல் பயிர்களை பாழ்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.எனவே எலிகளை ஒழிக்கும் வகையில் இருளர் சமூகத்தினர் மூலம் எலி பிடிக்கும் பணி நடந்து வருகிறது. எலி பிடிக்கும் பணியாளர்கள் வரப்புகளில் புகைமூட்டம் அமைத்து எலி பிடிக்கு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு எலியை பிடித்தால் ரூ.20 கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: