உலக மண்வள தின விழிப்புணர்வு கூட்டம்

திருக்கோவிலூர், டிச. 6: திருக்கோவிலூர் வட்டாரம் திருப்பாலபந்தல் கிராமத்தில் உலக மண் வள தினத்தையொட்டி, வேளாண்மைத் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வேளாண்மை அலுவலர் ராஜா வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி சாந்தி தலைமை தாங்கி பேசியதாவது: மண்வளத்தை பாதுகாக்க மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழு உரம், பசுந்தாள் உரம் மற்றும் இயற்கை உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். மண் பரிசோதனை செய்வதன் அவசியத்தையும் அளவுக்கு  அதிகமாக உரங்களை பயன்படுத்தாமல் அனைவரும் கட்டாயம் மண்வள அட்டைகளை காண்பித்து தேவையான அளவு உரங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என கூறினார்.

இதில் திருப்பாலபந்தல் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. துணை வேளாண்மை அலுவலர் சாந்தலட்சுமி, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி வேளாண்மை அலுவலர்கள் மகாதேவன், குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரவி, மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: