தடையை மீறி பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

விழுப்புரம், டிச. 6:  விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதையொட்டி முன்கூட்டியே கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக் போன்ற இடங்களில் இந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே விழுப்புரம் நகராட்சி பகுதியில் 50 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை மீறி பிளாஸ்டிக் பை, கவர், கிளாஸ் போன்றவைகள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி ஆணையருக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நேற்று ஆணையர் லட்சுமி தலைமையில், நகர்நல அலுவலர் ராஜா மற்றும் குழுவினர் நகரில் பல்வேறு கடைகளில், ஓட்டல்கள், மளிகை கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, கிளாஸ் உள்ளிட்ட ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: