புதுவை-காரைக்காலில் தீவிர வாகன சோதனை

புதுச்சேரி, டிச. 6: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி புதுவை மற்றும் காரைக்காலில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992 டிசம்பர் 6ம்தேதி இடிக்கப்பட்டது. இதனால் இரு பிரிவினருக்கு இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம்தேதி எவ்வித அசாம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுவையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் 100 அடி சாலை, 45 அடி ரோடு, கோரிமேட்டில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன சோதனையை புதுச்சேரி காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மப்டி உடையிலும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல், காரைக்காலிலும் நேற்றிரவு முதல் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கும் முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தி சந்தேக நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றன.

Related Stories: