கஜா புயலால் கடற்கரைக்கு தள்ளப்பட்ட சேற்றை அப்புறப்படுத்தும் பணி அரசு முதன்மை செயலர் ஆய்வு

வேதாரண்யம்,டிச.6:  நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜாபுயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நடை பெற்று வரும் சீரமைப்பு பணிகளை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முதலாவதாக தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாலுவேதபதி கிராமத்தில் புயலால் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கும் பணியினை பார்வையிட்டு பணிகளை விரை ந்து முடிக்க மின் பணியாளர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் மின் சீரமைப்பு பணிகளுக்கு தேவையான மின்கம்பம், மின் உதிரிபாகங்கள் கையிருப்பு குறித்தும், கூடுதல் பணியாளர்களுக்கான தேவை குறித்தும் மின்வாரிய அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

 தொடர்ந்து நாலுவேதபதி, புஷ்பவனம்  கிராமங்களில் கஜா புயலின் போது ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அலைகள் மூலம் கரைப்பகுதிக்கு தள்ளப்பட்ட சேற்றுமணலை, வேளாண் பொறியியல் துறையினர், தனியார் தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அப்புற ப்படுத்தும் பணியினை பார்வையிட்டார்.இப்பணியில் 8ட்ராக்டர் டிப்பர்கள், 3 சங்கிலி இணைப்புடன் கூடிய புல்டோசர்கள், 1 ஜேசிபி இயந்திரம் மற்றும் 1 பொக்லைன் இயந்திரம் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கடல் சேற்றி னை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவன அமைப்பாளர்களிடம் இப்பணியினை விரைந்து முடித்து கடற்கரை பகுதிகளை பொதுமக்களும், மீனவர்களும் பயன்படுத்தும் வண்ணம் சீரமைத்திட கேட்டுக் கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க செய்யும் வகையில் அரசு துரிதமாக செயல்பட்டு, கணக்கெடுப்பு விவரங்கள் கணிணியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, நிவார ணத் தொகை மற்றும் நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகவதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாவட்டவருவாய் அலுவலர் சுப்புலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories: