20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் விஏஓக்கள் உள்ளிருப்பு போராட்டம்

மயிலாடுதுறை,டிச.6:20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலகர்கள் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாலை முதல் இன்று காலைவரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  நாடு முழுவதும் 2200 கிராம நிர்வாக அலுவலர்கள் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில் அந்தப்பணியினை கூடுதலாக பார்க்கும்போது வழங்கவேண்டிய தொகையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது கூடுதல் வேலைக்கு உரிய தொகையை வழங்க வேண்டும், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் வழங்குவதுபோன்ற நடைமுறையை செயல்படுத்தவேண்டும்,   கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கட்டிடமோ அல்லது உறிய வசதி இன்றி படுமோசமாக உள்ளது 40%  பெண் விஏஓக்கள் பணியாற்றிவருகின்றனர் ஆனால் அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கவேண்டிய நிலை உள்ளது.

 அனைத்தும் ஆன்லைன் என்று கூறுகின்றனர், அதற்குத்தேவையான உபகரணங்களை வழங்குவதில்லை, டெக்னிக்கல் கேடர் என்ற பதவியை இந்த அரசு ஒழித்துள்ளது, அதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர், ஆகவே மீண்டும் டெக்னிக்கல் கேடரை ற்படுத்தவேண்டும் என்பது போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இரவு மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலத்தில் சங்கத்தின் தலைவர் திருமலைசங்கு தலைமையில் மாவட்டசெயலாளர் மாரிமுத்து, வட்ட செயலாளர் குமரேவேல் ஆகியோர்முன்னிலையில் 37 ஆண் 13 பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   வட்டதலைவர் திருமலைசங்கு கூறுகையில், வரும் 7ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம், அதற்பிறகு தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போகிறோம் என்று தெரிவித்தார்.

Related Stories: