வேதாரண்யம் பகுதியில் நிவாரண பணிகள் வழங்க கோரி 8 இடங்களில் சாலை மறியல் 440 பேர் கைது

வேதாரண்யம்,டிச.6: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் புயலால் பாதிப்படைந்த மக்களுக்கான நிவாரண பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 8 மையங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 440 பேர் கைது செய்யப்பட்டனர்.கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தி அனைத்து தரப்பினருக்கும் வழங்க வேண்டும், சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக பாதுகாப்பான காங்கிரீட் வீடுகள் கட்டித்தரவும், தென்னை, மா, சவுக்கு, முந்திரி, நெற்பயிர் பாதிப்புக்கான நிவாரணங்களை பாகுபாடில்லாமல் கணக்கிட்டு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி சாலை மறியில் நடைபெற்றது.

தகட்டூர் கடைவீதியில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமையில் மறியல் செய்த 70 பெண்கள் உள்பட 160 பேர் கைது செய்யப்பட்டனர். மருதூர் கடைவீதியில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் த.நாராயணன் தலைமையில் மறியல் செய்த 35 பெண்கள் உள்பட 120 பேர் கைதாகினர். ஆயக்காரன்புலத்தில் கிளைச் செயலாளர் கணேசன் தலைமையில் 32 பேரும்,வேதாரண்யம் நகரத்தில் நகரச் செயலாளர் ராசேந்திரன் தலைமையில் 43 பேரும்,கரியாப்பட்டினம் கடைவீதியில் கருணாநிதி தலைமையில் 32 பேரும் கைதாகினர்.தலைஞாயிறு ஒன்றியம் அருந்தவம்புலம் கடைவீ,தியில் மறியல் செய்த இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் பாஸ்கரன்,கட்சியின் ஒன்றியச் செயலாளர் மகேந்திரன்,நிர்வாகி சந்தானராமன் உள்பட 38 பேரும்,மணக்குடி கடைவீதியில் நிர்வாகக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: