கலசபாக்கம் அருகே பரபரப்பு..ஜெயலலிதா நினைவு நாளில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்

கலசபாக்கம், டிச.6:கலசபாக்கம் அருகே நடந்த ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று, எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் ஏற்பாட்டின்பேரில், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம், புதுப்பாளையம், ஜமுனாமரத்தூர், போளூர் ஆகிய ஒன்றியங்களில் அதிமுகவினர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.கலசபாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தில் இருந்து, எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் மவுன ஊர்வலம் சென்றனர். பின்னர், கலசபாக்கம் பஸ் நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு எம்எல்ஏ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, காப்பலூர் கூட்ரோடு, மேல்வில்வராயநல்லூர் கூட்ரோடு, தென்மகாதேவமங்கலம் ஆகிய கிராமங்களில் ஜெயலலிதா சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் பரபரப்பை ஏற்படுத்தியது.இதில் அதிமுக மாவட்ட துணைச்செயலாளர் எல்.என்.துரை, பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றிய செயலாளர் புருஷோத்தமன், அவைத்தலைவர் கருணாமூர்த்தி, ஒப்பந்ததாரர் எல்.என்.வெங்கடேசன், நகர செயலாளர் சித்திரைசேனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: