2ம் ஆண்டு நினைவு தினம் ஜெயலலிதா படத்துக்கு மரியாதை

வி.கே.புரம், டிச. 6:  வி.கே.புரத்தில் நகர அதிமுக சார்பில் நடந்த ஜெ. நினைவு தின நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ சக்திவேல்முருகன், அம்பை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட துணை செயலாளர் பார்வதிபாக்கியம், மினிசூப்பர் மார்க்கெட் கூட்டுறவு துணை தலைவர் அசோக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். மாவட்ட பாசறை இணை செயலாளர் வெங்கட்ராமன் கலந்து கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படடது. இதில் நகர செயலாளர்கள் அறிவழகன், ராமையா, முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, நகர மகளிரணி செயலாளர் இமாகுலேட், சிவந்திபுரம் ஊராட்சி முன்னாள் துணை தலைவர் பிராங்கிளின், முன்னாள் கவுன்சிலர்கள் விஜயபாலாஜி, சந்திரசேகர் ஆபிரகாம், வார்டு செயலாளர்கள் மாரியப்பன், கல்யாணசுந்தரம் மற்றும் சிங்கை அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர். வி.கே.புரம் நகர அமமுக அலுவலகத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகர துணை செயலாளர் வெள்ளைச்சாமி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் முனியசாமி, சிவா, ஆலடிஜெயம், வினோத்      உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவந்திபுரத்தில் அமமுக சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மவுன ஊர்வலம் நடந்தது. இதில் அம்பை ஒன்றிய செயலாளர் ஆனையப்பன், சிவந்தி  புரம் ஊராட்சி செயலாளர் கோபிநாத், ஒன்றிய அவை தலைவர் கதிரவன், இலக்கிய அணி மாவட்ட துணை செயலாளர் சண்முகவேல் மற்றும் அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பூலாங்குளத்தில் பாசறை ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் ஜெயலலிதா உருவபடத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதிமுக ஊராட்சி செயலாளர் சந்திரன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் தெய்வநாதன், கணேஷ்ராஜ், குமார் தங்கம், மேகலிங்க ராஜா, வேலு, ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.கடையநல்லூரில் நகர அதிமுக சார்பில் ஜெ. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் கிட்டுராஜா தலைமை வகித்தார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, ராசய்யா, சவுதிஅரேபியா ஜெ. பேரவை செயலாளர் மைதீன், நகர எம்ஜிஆர்மன்ற செயலாளர் முருகன், இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி அப்துல்ஜப்பார், பொருளாளர் அழகர்சாமி, இளைஞர் பாசறை ராஜேந்திரபிரசாத், ஜெயமாலன், முகம்மது உவைஸ், பழனிசாமி, நாகூர்மீரான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை தாலுகா அலுவலகம், பாம்பே ஸ்டோர், குளத்துமுக்கு, மேலூர் உள்ளிட்ட இடங்களில் நகர அதிமுக சார்பில் ஜெ. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர செயலாளர் கிருஷ்ணமுரளி என்கிற குட்டியப்பா தலைமை வகித்தார். முன்னாள் நகரமன்ற தலைவர் மோகனகிருஷ்ணன், முன்னாள் துணை தலைவர் கணேசன், நகர அவை தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, நகர துணை செயலாளர் பூசைராஜ் முன்னிலை வகித்தனர். முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் செந்தில்ஆறுமுகம், ஐயப்பன் ராஜகோபால், கனியத்தா, வக்கீல் ஆதிபாலசுப்பிரமணியன், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் 26 இடங்களில் அமமுக சார்பில் ஜெயலலிதா உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நகர செயலாளர் முத்துகிருஷ்ணன் என்ற கண்ணன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் கணபதிராமன், மருத்துவரணி செயலாளர் ரவீந்திரன், இளைஞரணி வக்கீல் கார்த்திக், அவைத்தலைவர் தசரதராமன், ஒன்றிய செயலாளர் தெய்வநாயகம், இணை செயலாளர் மாரிராஜ், முருகன், மணிகண்டன், கூட்டுறவு நிர்வாகிகள் சந்தானம், மூசா, அசரப், ஆறுமுகம், அமுதவல்லி, கிருஷ்ணவள்ளி, இசக்கி, லெட்சுமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அம்பை பூக்கடை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு அமமுக நகர செயலாளர் சுரேஷ் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் இணை செயலாளர் மாரியப்பன், அவைத்தலைவர் காசி ஆறுமுகம், அபிராமிஇசக்கிமுத்து, வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் வேல்சாமி பாண்டியன், வழக்கறிஞரணி பாஸ்கர், இசக்கிமுத்துவேல், கந்தப்பன், இஸ்மாயில், அலெக்ஸ், ரசூல்ராஜா, கிருஷ்ணன், ரவிச்சந்திரன், சுந்தர், சுபாஷ், ராஜூ, வினோத், காசி, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகிரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி ஊர்வலம் நடந்தது. ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன் தலைமை வகித்தார். சிவகிரி தேவர் சிலை முன்பு தொடங்கிய ஊர்வலம், ராஜாஜி தெரு வழியாக காந்தி கலையரங்கம் வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜா பாண்டியன், துணை செயலாளர் சின்னத்துரை, ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் சாமிவேல், மாவட்ட பேரவை துணை செயலாளர் கார்த்திகைச்செல்வன், வாசு. நகர செயலாளர் குமரேசன், ஒன்றிய அவை தலைவர் முகம்மது உசேன், சிவகிரி நகர நிர்வாகிகள் துக்காண்டி, தங்கமணி, கருப்பனபாண்டியன், வெங்கடேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர்.

அமமுக சார்பில் சிவகிரி பேரூராட்சி அலுவலகம் முன்பு ஜெயலலிதா படத்திற்கு ஒன்றிய செயலாளர் துரைப்பாண்டியன் தலைமையில் அமமுகவினர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சுமதி கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், பேரூர் செயலாளர்கள் கோபாலகிருஷ்ணன், ராஜ், மாவட்ட மீனவரணி செயலாளர் பொன் முத்துவேல்சாமி, மாவட்ட வழக்கறிஞரணி துணை செயலாளர் துரைப்பாண்டியன், ஜெ. பேரவை ஒன்றிய செயலாளர் மருதுபாண்டியன், அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலாளர் மணியன், செல்வக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: