ஜெயலலிதா 2ம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினர் மவுன ஊர்வலம் மலரஞ்சலி

நாகர்கோவில், டிச.6 : ெஜயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் நேற்று அதிமுகவினர் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் ெஜயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாகர்கோவிலில் நேற்று காலை மவுன ஊர்வலம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் டதி பள்ளி சந்திப்பு, எஸ்.எல்.பி. பள்ளி, கோர்ட் ரோடு வழியாக வேப்பமூடு பூங்கா அருகே முடிவடைந்தது. பின்னர் அங்கு அலங்கரித்து வைத்திருந்த ஜெயலலிதா படத்துக்கு அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், பால் வள தலைவருமான எஸ்.ஏ.அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், அணி செயலாளர்கள் ஜெயசீலன், பொன். சுந்தரநாத், வக்கீல் சுந்தரம், சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார், அழகேசன், அசோக்குமார், நாகர்கோவில் நகர செயலாளர் சந்துரு மற்றும் நிர்வாகிகள் இ.என்.சங்கர், தர்மர், ரயிலடி மாதவன், ரபீக், கார்மல்நகர் தனீஷ், கோபாலகிருஷ்ணன், பேரூர் செயலாளர் வினிஸ்டன், பூலோகராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். பெண்களும் இதில் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு சட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். ஊர்வலத்துக்கு முன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ெஜயலலிதாவின் படம் அலங்கரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.

குமரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தக்கலையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தக்கலை மேட்டுக்கடையில் இருந்து மவுன ஊர்வலம் தொடங்கியது. மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவ குற்றாலம், கேஏ.சலாம், பிசிஎன்.திலக்குமார், அமல்ராஜ், எம்ஏகே.ஜெபஹர், சுதர்சனன், சத்தியாதேவி, லிசம்மாள், ஜார்ஜ், ஜின்னா, குமார், மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் கலந்து ெகாண்டனர். மவுன ஊர்வலமானது பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் குமரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய சந்திப்புகளில் ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆதி திராவிடர், பழங்குடியினர் விடுதிகளில் செயல்படாத நீராவி கொதிகலன்கள்

நாகர்கோவில், டிச.6: ஆதி திராவிடர் நல இயக்குநர் முரளிதரன் அனைத்து மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் உண்டு உறைவிட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விரைவாக உணவு தயாரித்து வழங்கிடவும், சூடாக உணவினை வழங்கிடும் வகையிலும் 380 ஆதி திராவிடர் நல விடுதிகள் மற்றும் 160 பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளுக்கு நீராவி கொதிகலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த 540 நீராவி கொதிகலன்களின் செயல்பாடுகள் குறித்து ஆதி திராவிடர் நல இயக்குநராக கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் ஆகியோரை கொண்ட குழு அமைத்து அனைத்தும் செயல்படுவதாக தெரிவித்தும் இனி வரும் காலங்களில் நீராவி கொதிகலன்கள் செயல்பாட்டில் இல்லை என்றால் அதற்கான முழு பொறுப்பும் காப்பாளர், தனி தாசில்தார் மற்றும் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரையே சாரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில விடுதிகளில் நீராவி கொதிகலன்கள் செயல்பாட்டில் இல்லை என்று தெரியவருகிறது. அனைத்து நீராவி கொதி கலன்களின் செயல்பாட்டை உறுதி செய்திட அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்ட விடுதியில் குறைந்த அளவு மாணவர்கள் இருப்பின் அதனை மாவட்டத்திற்குள் வேறு விடுதியில் மாற்றம் செய்யலாம். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: