புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் 10, 635 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் பயிர்கள் சேதம்

புதுக்கோட்டை, டிச. 5 : கஜா புயலினால்  புதுக்கோட்டை மாவட்டத்தில் மீட்பு பணிகள் படிப்படியாக நடைபெற்று தற்போது முடிவடையும் தருவாயில் இருந்து வருகிறது. மின் இணைப்பு கொடுக்கும் பணியில் தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த  16ம் தேதி காலை 10 மணி கஜா புயல்  கோரத்தாண்டவமாடியது. இதனால் தென்னை, வாழை, பலா, வேம்பு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் வேரோடு சாய்ந்தது.. இதனையடுத்து சென்னையில் இருந்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து வருவாய் துறையினரின் உதவிடன் பல்வேறு வகையான கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். . புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் காயமடைந்துள்ளனர். 51 ஆயிரத்து 450 குடிசை வீடுகளும், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 900 ஓட்டு வீடுகள் என மொத்தம் 1 லட்சத்து 82 ஆயிரத்து 280 வீடுகள் சேதமடைந்துள்ளது.  இதே போல் ஆயிரத்து 643 ஆடுகளும், 424 மாடுகள் என மொத்தம் 2 ஆயிரத்து 100 கால்நடைகள் இறந்துள்ளது. இதே  போல் புயலின் வேகத்தில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 770 மரங்கள் சாய்ந்துள்ளது. இதில் 6 லட்சத்து 45 ஆயிரம் மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதபோல் புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 621 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். புயலால் 10 ஆயிரத்து 635 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண்மை பயிர்கள் சேதடைந்துள்ளது.

இதே போல் 5 ஆயிரத்து 137 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த 39 துணை மின்நிலையங்கள் அனைத்தும் சரிசெய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த 45 ஆயிரத்து 727 மின்கம்பங்களில் 29 ஆயிரத்து 925 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளது. 345 சேதமடைந்த மின்மாற்றிகளில் 200 சரி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 14 ஆயிரத்து 960 மின் இணைப்புகளில் 5 லட்சத்து 553 மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடிநீர் வினியோகத்திற்கு அனைத்து இடங்களிலும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வீடுகள் இழந்தோர்களுக்கு நிவாரண நிதி வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிவாரண பொருட்கள் வழங்க பிரித்து சரிசெய்யும் பணியில் மகளிர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: