தெருவிளக்கு எரியாததால் மக்கள் கடும் அவதி

கோத்தகிரி டிச.4: கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ராம்சந்த் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தபால் நிலையம், வங்கி, வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் இப்பகுதியில் உள்ளதால் தினசாி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இரவு பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் ராம்சந்த் பகுதியில் இருந்துதான் சென்று வருகின்றனர்.

 பேரூராட்சிட சார்பில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரத்தில் உள்ள 5 விளக்குகளில் தற்போது ஒன்று மட்டுமே எரிகிறது. ராம்சந்திலிருந்து ரைப்பிள் ரேஞ்ச் சாலை, மிஷன் காம்பவுண்ட் சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் எரியாததால் இரவில் சுற்றி திரியும் காட்டு பன்றிகள், காட்டெருமைகளிடம் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.  மின் விளக்குகள் எரியாதது குறித்து பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Related Stories: