மழையால் நிரம்பிய ரேலியா அணை

குன்னூர், டிச. 4: நீலகிரி மாவட்டம் குன்னுார் நகராட்சியில் 30க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குன்னூர் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. கோடை காலங்களில் ரேலியா அணையில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுபாடு ஏற்படுவது தொடர் கதையாக உளளது. இதனால், மக்கள் குடிநீர் தேடி ெதாலைவில் உள்ள நீரோடைகளில் இருந்து லாரிகள் மூலமாக கொண்டு வந்து பயன்படுத்தி வருகின்றனர்.

 

 இந்நிலையில் தற்போது குன்னுாரில் தென்மேற்கு பருவமழை மற்றும் கஜா புயல் காரணமாக பெய்த மழை காரணமாக முக்கிய குடிநீர் ஆதாரமான ரேலியா அணை முழுமையாக நிரம்பி காணப்படுகிறது. இருப்பினும் கோடை காலத்திற்கு தேவை என கூறி, குன்னூர் நகராட்சி நிர்வாகம் மாதத்திற்கு 15 நாட்கள் முதல் 20 நாட்கள் வரை சுழற்சி அடிப்படையில், மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. இதனால் அணையில் உள்ள நீர் வீணாகி வருகிறது. எனவே ரேலியா அணையில் இருந்து குன்னூர் நகராட்சி நிர்வாகம் மக்களுக்கு தினமும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: