பிக் அப் வேன் மீது கார் மோதல் ஒருவர் காயம்: போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி, நவ.30: ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் பகுதியில் பிக் அப் வேனும், காரும் மோதிக் கொண்டதால் ஊட்டி - மஞ்சூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஊட்டி அருகேயுள்ள காத்தாடிமட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்த ரவி மகன் மதன்ராஜ் (27). இவர், வெளிநாட்டில் வேலை செய்கிறார். விடுமுறைக்காக ஊட்டி வந்த இவர் தனது தந்தையின் பிக் அப் வேனை எடுத்துக் கொண்டு காத்தாடிமட்டத்தில் இருந்து 6வது மைல் பகுதிக்கு நேற்று சென்றார். அப்போது ஊட்டியில் இருந்து காத்தாடிமட்டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று பின் அப் வேன் மீது மோதியது.

இதில், மதன்ராஜ் காயமடைந்தார். ஊட்டியை சேர்ந்த கார் டிரைவர் பிரின்ஸ் காயமின்றி தப்பினார். மதன்ராஜ் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார்.   இவ்விபத்தின் காரணமாக ஊட்டி - மஞ்சூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இந்த விபத்தின் போது, அரசு பஸ் டிரைவர் ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த பஸ் டிரைவர்கள் பஸ்சை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த காந்தல் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்த பின், போக்குவரத்து துவங்கியது. பின் அப் வேன் மீது கார் மோதிய விபத்து குறித்து காந்தல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: