செயல்பாட்டுக்கு வராத குரங்குகள் காப்பகம்

குன்னூர்,நவ. 30: நீலகிரி மாவட்டம் 60 சதவீத வனப்பகுதியை கொண்டுள்ளதால், வனவிலங்குகள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, குரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இவை சாலையோரங்களில் உணவுக்காக வரும்போது, வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.  வீடுகளை சுற்றிவரும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து தின்பண்டங்களை எடுத்துச் செல்வது உள்ளிட்ட அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில், நகரில் பிரச்னைகளில் ஈடுபடும் குரங்களை பிடித்து வைக்கவும், சாலைகளில் வாகனங்களில் அடிப்படும் குரங்குகளுக்கு சிகிச்சை அளிக்கவும், குன்னுார் - கோத்தகிரி சாலையில், வட்டப்பாறை பகுதியில் உள்ள வனத்தில், 12 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு குரங்குகள் காப்பகம் அமைக்கும் பணிகள் துவங்கின.

 இதன் பணிகள் முடிவடைந்து, கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி,  வீடியோ கான்பிரன்சிங் மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.ஆனால் இக்காப்பகம் இன்னம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் இங்குள்ள காப்பகத்தில் முதலுதவி  செய்வதற்காக வைக்கப்பட்ட புதிய உபகரணங்களும் வீணாகி வருகிறது.

Related Stories: