₹93 லட்சம் உண்டியல் காணிக்கை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹93 லட்சத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பவுர்ணமி முடிந்த பின்னர் எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கடந்த 23ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் இரவு நிறைவடைந்தது. இதையடுத்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நடந்தது. இதில் ₹93 லட்சத்து 63 ஆயிரமும், 114 கிராம் தங்கமும், 621 கிராம் வெள்ளியும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர். இந்த பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

Related Stories: