அரியலூரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 313 கோரிக்ைக மனுக்கள்

அரியலூர், நவ. 21: அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் 313 கோரிக்கை மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவி திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கை அடங்கிய 313 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. பின்னர் மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

பின்னர் தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த 61வது குடியரசு தின தடகள போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்த அரியலூர் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஷாலு ரெகனாவை (17) கலெக்டர் பாராட்டினார். இதைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் டிஆர்ஓ தனசேகரன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: