அரியலூர் குரும்பஞ்சாவடியில் பன்றிகளால் நோய் பரவும் அபாயம்

அரியலூர்,நவ,21: அரியலூர் குரும்பஞ்சாவடியில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் அருகே உள்ள குரும்பஞ்சாவடியில் வீட்டு வசதி மாற்று வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள ஜெ.ஜெ. நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பாக  தற்போது அடுக்குமாடி வீடுகள் கட்டிகொண்டிருப்பதால் இப்பகுதிகளில் வாகனங்களை விட்ட சாக்கடைகளை இடித்துள்ளதாலும், அடிக்குமாடி வீடுகளில் உள்ள கழிவு நீர்களை சாலையில் விடுவாபலும் இப்பகுதிகளில் சரியாக தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாக்கடைகள் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இவற்றில் பன்றிகள் தஞ்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது பன்றி காய்ச்சல் நோய்கள் பரவி நிலையில் இது போன்று பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சாக்கடைகளை நோண்டிவிடுவதால்  கொசுக்கள் பன்றிகளை கடித்து விட்டு அவை அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று குழந்தைகள் பெரியவர்களை கடித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே  மாவட்ட நிர்வாகம் சாக்கடைகளை சரிசெய்யவும், பன்றிகள் வராமல் தடுக்கவும் உடனடியாக  சரி செய்ய ஜெ.ஜெ.நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: