கஜா புயலால் கரும்பு தோட்டம் சேதம்

அரியலூர்,நவ,21: கஜா புயலால் சேதமடைந்த கரும்பு தோட்டத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரியலூர் மாவட்டம், திருமானூர், த.பழூர் ஆகிய பகுதிகளிலும் கஜா புயலின் தாக்கம் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கோத்தாரி சர்க்கரை ஆலைக்குட்பட்ட 50 கிராமங்களில் விவசாயிகள் கரும்பு சாகுபடி பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட கரும்பு சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் வயலில் சாய்ந்து பலத்த சேதம் அடைந்துள்ளது. இது வரை எவ்வளவு நிவாரணம் அளிக்கவுள்ளார்கள். என அதிகாரிகளை கேட்டால் உரிய விபரம் தெரியவில்லை என கூறுகின்றார்கள். அரசு கரும்புக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சன்னாவூர் கிராமத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் மக்கா சோளம் பயிரிடப்பட்டுள்ளது. அதில் ஏறத்தாழ 500 ஏக்கர் பரப்பளவில் மக்காசோளப்பயிர் தரையில் சாய்ந்துள்ளது.

அத்தோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தரமற்ற மக்காசோள விதைகளை வழங்கி அதன் மூலம் மக்காசோளம் முழுக்க படைப் புழுவால் பாதிக்கப்பட்டும் வேளாண் துறை உரிய ஆலோசனைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் இந்தப் பகுதி விவசாயிகள் முன்வைக்கின்றனர். இதனால் விவசாயிகள் இழப்பீடுத் தொகை வழங்கவும் குளறுபடி இல்லாமல் உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க வேளாண்மை துறை மூலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related Stories: