தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

அரூர், நவ.15: தீர்த்தமலை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தர்மபுரி கலெக்டர் ஆய்வு நடத்தினார்.

அரூர் வட்டம், தப்பக்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்வன்(54). கூலி தொழிலாளியான இவர், கோவையில் வசித்து வந்தார். கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட செல்வன், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். செல்வனுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரிவந்தது.

இதையடுத்து, அவரது சடலம், சொந்தஊரான தப்பக்குட்டை கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பன்றிக்காய்ச்சலால் தொழிலாளி இறந்ததையடுத்து, தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தர்மபுரி கலெக்டர் மலர்விழி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகள், டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், தேவையான மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளதா என்பது குறித்து, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், தீர்த்தமலையில் கழிவுநீர் கால்வாய் வசதிகள், தூய்மை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: