குண்டர் சட்டத்தில் 2 ேபா் கைது

கீழ்வேளூர். நவ.15: குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி மற்றும் பிரபல ரவுடி கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ராதாமங்கலம் பள்ளிகூட தெருவை சேர்ந்த குஞ்சாலி மகன் குமார் (45). இவர் மீது கிழ்வேளூர் காவல்நிலையம் மற்றும் நாகை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்நிலையத்திலும் பல்வேறு சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது.

மேலும் இவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததால் நாகை எஸ்.பி. விஜயகுமார் பரிந்துரையின் பேரில் நாகை கலெக்டர் சுரேஷ்குமார் சாராய வியாபாரி குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடி தென்பாதி பகுதியைசேர்ந்தவர் சந்தானம் மகன் ஜெகன்(29).  இவர் மயிலாடுதுறை காவல்நிலைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் சென்னை புழல்சிறையில் உள்ள ரவுடி கபிரியேலின் கூட்டாளியாகவும் ரவுடி வெள்ளப்பள்ளம் வினோத்கூட்டாளியாகவும் செயல்பட்டு வந்தார். பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழிப்பறி பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இவர்மீது குண்டர் தடுப்புக்காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாகை எஸ்பி விஜயகுமார் பரிந்துரையின்பேரில் கலெக்டர்  சுரேஷ்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அதற்கான உத்தரவை திருச்சி சிறையில் உள்ள ஜெகனிடம் வழங்கப்பட்டது.

Related Stories: