பெரும்புதூர் அருகே மழையில் ஒழுகும் ரேஷன் கடை

பெரும்புதூர், நவ.15: பெரும்புதூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் கொளத்தூர், மேட்டு கொளத்தூர், வெள்ளரை, நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது கொளத்தூர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு என்று ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில்  500க்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். தற்போது இந்த ரேஷன் கடை கட்டிடம் மேற்கூரை சேதமாகி உள்ளது. இதனால் மழைக்காலத்தில் கட்டிடத்தின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கி, கசிந்து வருகிறது. இதனால் ரேஷன் பொருட்கள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கொளத்தூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரேஷன் கடை உள்ளது.

இந்த கட்டிடம் முறையாக கட்டப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் கசிந்து கடையில் உள்ளே தண்ணீர் தேங்கிவிடுகிறது. இதனால் ரேஷன் அரிசி, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் வீணாகிவிடுகிறது. எனவே கொளத்தூர் கிராமத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்ட வேண்டும் என்று பல முறை கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பழுதடைந்து காணப்படும் ரேஷன் கடையை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர்.

Related Stories: