போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம்

தேன்கனிக்கோட்டை, நவ.14:  அஞ்செட்டியில் போதை பொருள் தடுப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனச்சரக அலுவலகத்தில், போதை பொருள் தடுப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அஞ்செட்டி வனச்சரக அலுவலர் ரவி, சேலம் போதை தடுப்பு காவல் ஆய்வாளர் லதா, அஞ்செட்டி வருவாய் ஆய்வாளர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர் கலந்து கொண்டனர். அஞ்செட்டி மலை கிராமங்கள், வனப்பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா பயிரிடப்படுகிறது. அவற்றை பயிரிடுபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: