மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

ஓசூர், நவ.14: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் அறிமுக கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் தளி பிரகாஷ் எம்எல்ஏ தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள திருவிடை மருதூர் முன்னாள் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஊராட்சிகள்தோறும் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், திமுக தலைவராக பொறுப்பேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் முதல் முறையாக வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பளிப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வேப்பனஹள்ளி எம்எல்ஏ முருகன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணை செயலாளர் விஜய்குமார், மாவட்ட துணை செயலாளர்கள் சீனிவாசன், தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுகுமாறன், வீராரெட்டி, பொதுக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, சாந்தி அரியப்பன், நகர பொறுப்பாளர் சத்யா, சின்னபில்லப்பா, ரகுநாத், சீனிவாசரெட்டி, திவாகர், கணேசன், நாகன், வெங்கடேஷ், நாகேஷ், சீனிவாசன், குமார், சீனிவாசன், ராஜா, ஞானசேகரன், எல்லோராமணி, பாக்யராஜ், சின்னராஜ், முனிராஜ், சேகர், கருணாநிதி, சென்னீரப்பா, நாகராஜ், சாந்தி, திம்மராஜ், செந்தில்குமார், முனிரத்னா, சுனந்தா, சாலம்மாள், சுமன், ரத்தன்சிங், ரவிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: