ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, நவ.14: தமிழக அரசின் அனைத்து துறை சார்ந்த ஓய்வூதியர்கள் சங்கத்தின், தர்மபுரி மாவட்ட கிளை சார்பில்  கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் முனிராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சவுந்திரம், இணை செயலாளர் மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், சுந்தரமூர்த்தி, டியூக் பொன்ராஜ், அப்பாவு, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவ பரிசோதனை கட்டணம், மருத்துவ சிகிச்சை செலவுகள் அனைத்தையும் வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதந்தோறும் ₹1000 வழங்க வேண்டும். காப்பீடு திட்ட மாதாந்திர சந்தாவை ₹350 லிருந்து ₹150ஆக குறைக்க வேண்டும். மத்திய அரசை போல், அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ₹9000 வழங்க வேண்டும். 1.1.2016 முதல் 30.9.2017 வரையிலான 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் பாபு நன்றி கூறினார்.அரூர்: அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின், அரூர் கிளை சார்பில், அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டார தலைவர் பத்மநாபன், செயலாளர் கோபால், கிருஷ்ணமூர்த்தி, ராமானுஜம், ரவீந்திரபாரதி, ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: