சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி

கடத்தூர், நவ.14: மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்வது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மொரப்பூர், கடத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர்(பொ) வேல்முருகன் தலைமை வகித்தார். விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை மானியம், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், பயிர் பாதுகாப்பு திட்டம், நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மை பயிர் சாகுபடி திட்டம் குறித்து, கூட்டு பண்ணை திட்ட இயக்கம் பராமரிப்பு வேளாண்மை உதவி பேராசிரியர் பரமேஸ்வரன் விளக்கி கூறினார்.

மேலும், மொரப்பூர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருமால், நெல் பயிரில் ஆணைக்கொம்பன் நோய் தாக்கம் பற்றி எடுத்து கூறினார். சூரிய சக்தியை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிப்பது குறித்தும்  விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை கிருஷ்ணமூர்த்தி, கபிலன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: