கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்,நவ.14: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். மருத்துவபடியாக மாதம் ரூ ஆயிரம் வழங்கிட வேண்டும். மத்திய அரசு போன்ற குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ 9 ஆயிரம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நகர செயலாளர் காசி தலைமையிலும், நகர தலைவர் அப்பாராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சீனிவாசன், செயலாளர் முனியன், பொருளாளர் மீனாட்சிசுந்தரம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் குடவாசல் தாலுக்கா அலுவலகம் முன்பாக ஓய்வூதியர் சங்கத்தின் வட்ட தலைவர்  கருணாநிதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர்கள் செல்லதுரை, ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முத்துப்பேட்ைட: முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தலைவர் கோவி.ரெங்கசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வேதரெத்தினம், மூத்த குடிமக்கள் இயக்க செயலாளர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை,  மாநில துணைத்தலைவர் தமிழரசன் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: