திருமக்கோட்டை திருமேனி ஏரி பகுதியில் இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள்: புதிதாக கட்டித்தர வேண்டும்

மன்னார்குடி, நவ. 14: திருமக்கோட்டை திருமேனி ஏரி பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டி தர வேண்டும் என்று நரிக்குறவர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் திருமக்கோட்டை திருமேனி ஏரி பகுதியில் சுமார் 75 ஆண்டுகளாக நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வந்தனர். கடந்த 1980ம் ஆண்டு அப்போதைய அதிமுக ஆட்சியில் ஏரிக்கரை புறம்போக்கு இடத்தை நத்தம் புறம்போக்கு என துறை ரீதியாக சட்டப்படி மாற்றி அதில் நரிக்குறவர்கள் வசிக்கலாம் என உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து கூடாரமாக இருந்த இருப்பிடங்கள் குடிசை வீடுகளாக மாறியது.கடந்த 1990ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் இப்பகுதியில் வசித்த 54 நரிக்குறவர்  குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 சென்ட் நிலமும் இலவசமாக தந்து அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. மேலும் எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 54 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு நரிக்குறவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகியவையும் உள்ளன. இந்நிலையில் கான்கிரீட் வீடுகள் மிகவும் பழுதடைந்து குடியிருக்க முடியாத அளவிற்கு மோசமாக சிதிலமடைந்துள்ளது. இதனை உடனடியாக  முற்றிலும் இடித்து விட்டு இப்பகுதியில் தற்போது வசிக்கும் அணைத்து குடும்பத்தினருக்கும் அரசின் செலவில் புதிய கான்கிரீட் தொகுப்பு வீடுகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் நரிக்குறவர் சமூகத்தினர் உள்ளிட்ட பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.இதுகுறித்து நரிக்குறவர்கள் நலவாழ்வு சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், அரசின் சார்பில் கட்டி கொடுக்கப்பட்ட கான்கிரீட் வீடுகள் இடிந்து விழும் நிலையில் மேற்கூரைகள் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து எந்நேரமும் இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் வசித்து வருகிறோம். பல வீடுகளின் கதவுகள் உடைந்து திறந்தே கிடக்கிறது. இது பற்றி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.

நாங்கள் பாசிமணி விற்பது, பறவைகளை வேட்டையாடி அதன் மூலம் வரும் சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களால் புதிய வீடுகளை கட்ட பொருளாதார வசதி கிடையாது. எனவே அரசு அதிகாரிகள் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து தற்போது வசிக்கும் அனைத்து  குடும்பத்தினருக்கும் அரசின் செலவில் புதிய கான்கிரீட் தொகுப்பு வீடுகளை கட்டி தர வேண்டும் என்றனர். 1990ம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் இப்பகுதியில் வசித்த 54 நரிக்குறவர்  குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் தலா 3 சென்ட் நிலமும் இலவசமாக தந்து அதற்கான பட்டாவும் வழங்கப்பட்டது. மேலும் எஸ்சி, எஸ்டி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 54 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு நரிக்குறவர் சமூகத்தினருக்கு வழங்கப்பட்டது.

Related Stories: