அதிமுக முன்னாள் அமைச்சர் பேச்சு நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்த வேண்டும்

தஞ்சை, நவ. 14: தஞ்சையில் தமாகா விவசாய அணி டெல்டா மாவட்ட  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.தமாகா மாநில விவசாய அணி தலைவர்  புலியூர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் ஒரத்தநாடு  திருப்பதி வாண்டையார், வாசு கோவிந்தராஜ், திருமானூர் கைலாசம், பொது  செயலாளர் கார்த்தி, திருச்சி சங்கேந்தி தியாகராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  வரும் 25ம் தேதி அரியலூரில் நடக்கும் தமாகா 5ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி  தமாகா விவசாய அணி சார்பில் 10,000 விவசாயிகள் பங்கேற்பது. உர நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ள மத்திய அரசு அனுமதி  அளித்துள்ளது விவசாயிகளுக்கு பாதிப்பைஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு, விவசாயிகளுக்கு 4  சதவீத வட்டியில் ரூ.12 லட்சம் கோடி கடன் வழங்குவதாக அறிவித்தது. ஆனால்  இந்தியா முழுவதும் விவசாய நகைக்கடன் என்ற பெயரில் நகர்ப்புறங்களில்  வசிக்கும் அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், நகை அடகு கடைக்காரர்கள் சுமார்  ரூ.10 கோடிக்கும் மேல் 4 சதவீத வட்டியில் விவசாய கடன் பெற்றுள்ளனர்.  இதுகுறித்து உண்மையான விவசாயிகளுக்கு இந்த பயன்போய் சேர்ந்துள்ளதா என்பது  குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

நெல்லுக்கான விலையை குவிண்டாலுக்கு ரூ.3  ஆயிரமாகவும், கரும்புக்கான விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரமாகவும் உயர்த்தி  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: