சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகன பிரசார நிகழ்ச்சி

சேதுபாவாசத்திரம், நவ.14: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் பயிர் காப்பீடு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘கலாஜதா’ தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி பூக்கொல்லையில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா துவக்கி வைத்து பேசுகையில், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நஷடத்தை தவிர்க்க விவசாயிகள் உரிய கட்டணத்தை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பலனடையலாம் என்றார்.

இதைதொடர்ந்து பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், மணக்காடு, நெல்லியடிக்காடு, கொளக்குடி, முதுகாடு, ருத்ரசிந்தாமணி, பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு, அடைக்கத்தேவன், குப்பத்தேவன், திருவத்தேவன், சம்பைபட்டினம், நாடியம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனம் மூலம் பிரசார பயணம் நடந்தது. வேளாண்  அலுவலர்கள் சதீஷ்குமார், சுபாஷ், ராஜரத்தினம், சாந்தசீலா, பாலசந்தர், சுரேஷ், உதவி அலுவலர்கள் அய்யம்பெருமாள், லட்சுமணன், அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முருகானந்தம், ராஜு மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: