செம்பனார்கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கஜா புயல் முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்

செம்பனார்கோயில், நவ.14:    நாகை மாவட்டம், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல அலுவலர் கோவிந்தராஜன் தலைமை  வகித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து ஊராட்சி செயலர்களுக்கு எடுத்து கூறினார்.  இதில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளில் வசிப்பவருக்கு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும்.  பள்ளி சத்துணவுக்கூட சமையல் பாத்திரங்கள் மற்றும் சிலிண்டர்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 13ம் தேதி இரவுக்குள் முழுமையாக நீரேற்றம் செய்யப்பட்டு குளோரினேஷன் செய்யப்பட வேண்டும்.  மின்தடை வருவதற்கு முன்பே நீர்தேக்க தொட்டிகளை முழு கொள்ளளவுடன் இருப்பதை கண்காணிக்கப்பட வேண்டும்.  மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பவர் ஜெனரேட்டர்கள் மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் எடுத்து வைக்க வேண்டும் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை குறித்து கூறினார்.  இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் செம்பனார்கோவில் ஒன்றியத்தை சார்ந்த 57 ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: