வேதாரண்யம் கடைவீதியில் சாலையின் இருபுறமும் லாரிகள் நிறுத்தம்

வேதாரண்யம், நவ.14:  வேதாரண்யம் உப்புஉற்பத்தியில் தமிழகத்தில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இங்கு உப்பு ஏற்றுவதற்காகவும் விவசாயபொருட்கள் கொண்டுசெல்வதற்காகவும் வர்த்தக நிறுவனங்களுக்கு பொருட்கள் கொண்டுவருவதற்காகவும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டலாரிகள் இங்கு வந்து செல்கின்றன.  வேதாரண்யம் கடைவீதி என்பது மேலவீதி, வடக்குவீதி,திருத்துறைப்பூண்டிசாலைஆகிய மூன்றுபிரதானசாலைகளில்தான் வியாபாரநிறுவனங்கள் உள்ளது. தினசரிஉப்பு ஏற்றி வரும் , ஏற்றிச் செல்லும் லாரிகளும் வேதாரண்யம் மேலவீதியில் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிரே பலமணிநேரம் எதிர் எதிரே லாரிகளை நிறுத்தி விடுகிறார்கள்.  இதனால் பள்ளி மாணவ, மாணவிகள்,பாதசாரிகள்,பேருந்துபயணிகள்,பொருட்கள் வாங்கவரும் பொதுமக்கள்,வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்டஅனைத்து தரப்புமக்களும் பாதிக்கப்படுகின்றனர்;. மேலும் அடிக்கடி    விபத்தும் ஏற்படுகிறது. வர்த்தகநிறுவனங்களுக்குமுன்பு இருபுறமும் லாரிகள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் கடைக்குசென்றுபொருட்கள் வாங்கமுடி

யாமல் அவதிப்படுகின்றனர். ஆகவேவர்த்தகர்கள் பொதுமக்கள் நலன் கருதிகடைவீதியில் இருபுறமும் லாரிஉள்ளிட்டவாகனங்களைநிறுத்தமால் இருக்க லாரி நிறுத்துவதற்கென்றுதனி இடம் ஒதுக்கவேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Related Stories: