தலைஞாயிறு பேருராட்சியில் டெங்குகொசு ஒழிப்பு பணி தீவிரம்

வேதாரண்யம், நவ.14:  வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறுபேருராட்சிபகுதியில் டெங்குகொசுவைகட்டுப்படுத்த மூன்றாவது முறையாக கொசுமருந்துஅடிக்கப்பட்டது. நாகை கலெக்டர் சுரேஷ்குமார் அறிவுரையின்படி பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் டெங்குகொசுஒழிப்பிற்காக கொசு மருந்துஅடிக்கப்பட்டது. மேலும் பேருராட்சியில் 20 பணியாளர்கள் அனைத்துவீடுகளுக்கும் நேரடியாகசென்றுடெங்குகொசுஉற்பத்திசெய்யும் காரணிகளைஅப்புறப்படுத்தும் பணிகளைமேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்களதுவீட்டுசுற்றுப்புறத்தை தூய்மையாகவைத்திருக்கவேண்டும் எனவும் வீடுகளில் உள்ள தேவையற்றதேங்காய் ஓடு, பாட்டில் ,டயர்களை பேருராட்சிபணியாளர்கள் அகற்றினர்.இந்தநடவடிக்கைகுப்பிறகும் வீடுகளில் கொசுப்புழுக்கள் வளரக்கூடியகாரணிகள் கண்டறியப்பட்டால் பொதுசுகாதார நகராட்சிசட்டத்தின்படிரூ. 50,000 வரைஅபராதம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை இந்த இரண்டும் வீட்டுஉரிமையாளரிடம் வசூலிக்கப்படும் எனபேருராட்சிஆணையர்ரஞ்சித் தெரிவித்தார்.

Related Stories: