மயிலாடுதுறையில் புதிய டாஸ்மாக் கடையை மூடக்கோரி அனைத்துக்கட்சி பிரமுகர்கள் ஆர்டிஓவிடம் மனு

மயிலாடுதுறை, நவ.14:  நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 1ம் தேதி அன்று பேருந்துநிலையம் அருகில் புதிதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது, அவற்றை எதிர்த்தவர்கள்மீது வழக்குப் பாய்ந்தது.  அந்தக்கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பெண் போலீசார் மீது தாக்குதல் நடத்தி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறி 23 பேரை  கைதுசெய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.இதனை  கண்டித்தும்  அந்தக்கடையை நிரந்தரமாக மூடக்கோரியும் பல்வேறு அமைப்புகள் பாமக. தேமுதிக, விசிக, திராவிடர் விடுதலைக்கழகம், நாம்தமிழர்கட்சி, தமுமுக, எஸ்டிபிஐ, முமுக போன்ற அமைப்பினர் போராட்டக்குழு ஒன்றை பேராசிரியர் தலைமையில் அமைத்து  கூட்டத்தை நடத்தினர்,

கூட்டத்திற்கு பேராசிரியர் முரளிதரன் தலைமை வகித்தார், இதில் பாமகவை சேர்ந்த மாநிலதுணைத்தலைவர் அய்யாசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் காமராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்டசெயலாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் வேலுகுபேந்திரன், மமக மாவட்டசெயலாளர் ஷேக்அலாவுதீன், நாம்தமிழர்கட்சி மாவட்டசெயலாளர் தமிழன்காளிதாஸ், மஜக மாவட்ட குழுதலைவர் தாஜ்தீன், தேமுதிக ஒன்றியசெயலாளர் பாக்கம்சிவா, தமிழர்தேசியமுன்னணி சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்வருமாறு டாஸ்மாக் கடை திறப்பைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பெண் வன்கொடுமை வழக்குப் பதிவுசெய்யப்பட்டதைக் கண்டிப்பதுடன் உடனடியாக அவர்களை நிபந்தனையின்றி விடு

தலை செய்யவேண்டும்.  திறக்கப்பட்ட மதுபானக்கடையால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.  மயிலாடுதுறை நகரில் மதுக்கடையை அகற்றவும் புதிய மதுக்கடைகளை திறக்காமல் இருக்கவும் தொடர் போராட்டங்களை மக்களை அணிதிரட்டி நடத்திட போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அமைத்து செயல்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் சென்று இந்த தீர்மானத்தை மயிலாடுதுறை ஆர்டிஓ தேன்மொழியிடம் அளித்து கோரிக்கை வைத்தனர்.  இந்த கோரிக்கை குறித்து   கலெக்டருக்கு தெரிவிக்கிறேன் என்று ஆர்டிஓ தேன்மொழி தெரிவித்தார்.

Related Stories: