டெங்கு கொசு புழு இருந்ததால் ஒட்டல், நிறுவனத்திற்கு அபராதம்

மதுரை, நவ. 14:  மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள கடைகள், பெட்ரோல் பங்க், குடியிருப்பு பகுதிகள் மற்றும் கே.கே.நகரில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் நடராஜன், நேற்று டெங்கு தொடர்பாக ஆய்வு நடத்தினார். அப்பகுதியில் உள்ள கடைகள், ஒட்டல்கள் மற்றும் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தொட்டிகள் சுத்தமாக உள்ளனவா என நேரில் ஒவ்வொன்றாக பார்வையிட்டார். வீடுகளில் குடிநீர் தொட்டிகள் மொட்டைமாடி பகுதிகள், கழிவுநீர் கால்வாய் பகுதிகளில் ஏ.டி.எஸ் கொசுப்புழுக்கள் ஏதும் உருவாகியுள்ளனவா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

ஆய்வில் தனியாருக்கு சொந்தமான 2 ஓட்டல்கள் மற்றும் ஒரு கட்டுமான நிறுவனத்தில் டெங்குக்கான ஏடிஎஸ் கொசுப்புழு உற்பத்தியை கண்டறிந்தார். அந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் விதம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த அபராத தொகையை வசூல் செய்தனர்.

Related Stories: