குழித்தட்டு நாற்றுமுறை மாணவர்கள் விளக்கம்

திண்டுக்கல், நவ. 14:  ரெட்டியார்சத்திரம் கொத்தப்புள்ளி ஊராட்சி கதிரணம்பட்டியில் குழித்தட்டு நாற்றுகள் பற்றிய செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

வேடசந்தூர் எஸ்ஆர்எஸ்.வேளாண்மை கல்லூரி மாணவர்கள் இதுகுறித்து விவசாயிகளிடம் கூறியதாவது: ‘ஒரு ஹெக்டேர்க்கு 238 முன்மாதிரிகள் தேவைப்படும்.  குழித்தட்டில் ஒரு விதையை விதைத்தபின் மூடி மற்றொரு தட்டுக்களை மேலே வைக்க வேண்டும். பின்பு முளைக்கும் வரை ஒரு பாலிதீன் தாளை கொண்டு மூடிவிட வேண்டும்.

6 நாட்கள் நிழல் வலையில் இருப்பின் நடவு செய்ய வேண்டும். இதன்மூலம் விளைச்சல் அதிகரிக்கும்’ என்றனர். இதில் மாணவர்கள் பூவரசன், சதீஷ்குமார், ஸ்ரீதர், ஸ்டாலின், தியாகபாரதி, விஜய்பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: