பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல், நவ. 14:  பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி  மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தினக்கூலியாக ரூ.380 ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தி ஒப்பந்த ஊழியரை நிரந்தரப்படுத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டியில் உள்ள மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலை வகித்தார். திட்ட தலைவர் திருமலைராஜன் வரவேற்றார். தொடர்ந்து மறியலில் ஈடுபட கோஷங்கள் எழுப்பியவாறு வந்தனர். பின்னர் தாடிக்கொம்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்  கலந்து கொண்டனர்.

Related Stories: