புதிய டாஸ்மாக்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நத்தத்தில் பரபரப்பு

நத்தம், நவ. 14:  நத்தத்தில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நத்தம் பகுதியில் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. கோர்ட் உத்தரவையடுத்து 3 கடைகளும் அடைக்கப்பட்டன. இதற்கு மாற்று இடங்களை தேர்வு செய்ய முயன்றனர். ஆனால் மக்களின் எதிர்ப்பால் திறக்க முடியவில்லை. இதனால் நத்தத்தில் கடைகளின்றி இருந்தது. இந்நிலையில் கடந்த தீபாவளி பண்டிகையின்போது மதுரை செல்லும் சாலையில் கட்டியக்காரன் கண்மாய் பகுதி, செந்துறை செல்லும் சாலையில் செல்லம்புதூர் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். இதில் கட்டியக்காரன் கண்மாய் பகுதியில் தீபாவளிக்கு முன்னதாக கடை திறக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. செல்லம் புதூர் பகுதியில் திறக்கப்பட இருந்த கடைக்கு எதிர்ப்பு தெரித்து அப்பகுதி சுவரொட்டிகள் ஒட்டினர். இதனால் அக்கடை திறப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அங்கு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். இதனால் கொதிப்படை அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுவை ஒழிப்போம், சந்ததியை காப்வோம், வேண்டாம்.. வேண்டாம்.. டாஸ்மாக் கடை வேண்டாம் உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Related Stories: