காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு

காங்கயம், நவ.14: காங்கயம் காவல் நிலைய சரகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கும் வகையில் கிராம பொறுப்பு காவலர்கள் நியமனம், 172 கண்காணிப்பு கேமிரா பொருத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட எஸ்பி கயல்விழி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். இதில், காங்கயம் காவல் நிலையத்திற்குட்பட்ட தாய் கிராமத்தில் கிராம பொறுப்பு காவலர்கள்அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், காங்கயம் திருப்பூர் ரோடு படியூர் வரையிலும், காங்கயம் முத்தூர் ரோடு படியாண்டிபாளையம், காங்கயம் கோவை ரோடு கடையூர், காங்கயம் சென்னிமலைரோடு ஆலம்பாடி, காங்கயம் கரூர் ரோடு வீரணம்பாளையம் வரையிலும் கண்காணிக்க 172 கேமிரா பொருத்தப்பட்டது.

இவற்றை ஒருங்கிணைத்து அனைத்து தகவல்களும் காங்கயம் காவல் கட்டுப்பாடு அறையில் வைக்கப்பட்டு அங்குள்ள மெகா எல்.ஈ.டி.வில் கண்காணிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை எஸ்பி.,கயல்விழி துவக்கி வைத்தார். பின்னர், காங்கயம் போலீசார் குடியிருப்பில் மரங்கன்று நடப்பட்டது. இதைத்தொடர்ந்து, போலீஸ் குடியிருப்பில் எஸ்பி., ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் டிஎஸ்பி., மாடசாமி, காங்கயம் டிஎஸ்பி., கிருஷ்ணசாமி, இன்பெக்டர்கள் முருகேசன் (காங்கயம்), ஜெயபால் (வெள்ளக்கோவில்), சுந்தரபாண்டியன் (ஊத்துக்குளி) உள்பட பொதுமக்கள் 200 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: